ஜேர்மனி விமான நிலையத்தில் பாதுகாப்பு குறைவு!

Tuesday, April 19th, 2016

ஜேர்மனி விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்புகள் இல்லை என்பதை ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் தக்க ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள Cologne-Bonn விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதா என ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த கண்காணிப்பு அதிகாரிகள் கடந்த பெப்ரவரி மாதம் ஒரு அதிரடி சோதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த சோதனையின் அடிப்படையில், Cologne-Bonn விமான நிலையம் வழியாக அந்த அதிகாரிகள் பயங்கர வெடிப்பொருட்களை கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், விமான நிலையத்தில் இவர்கள் எவ்விதமான சோதனைக்கும் உட்படுத்தவில்லை. எந்த தடையும் இல்லாமல் அதிகாரிகள் ஆயுதங்களை கொண்டு சென்றதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு பலவீனமாக உள்ளது தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Cologne-Bonn விமான நிலையத்தில் Kotter Aviation என்ற தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் தான் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் மேலாளரான Klaus Wedekind என்பவரை தொடர்புக்கொண்டு விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, ‘ஜேர்மன் மத்திய பொலிசார் எங்களுடைய ஒவ்வொரு ஊழியரையும் தீவிரமாக சோதனை செய்த பிறகு தான் இந்த பொருப்பை ஒப்படைத்துள்ளனர்.

மத்திய பொலிசார் எங்களுக்கு வைத்த சோதனையில் நாங்கள் 98 சதவிகிதம் தேர்ச்சி பெற்றோம். அதனால், எங்களுடைய பாதுகாப்பில் எவ்வித பலவீனமும் இல்லை.

எனினும், தற்போது வெளியாகியுள்ள பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், இது குறித்து விசாரணை செய்யப்படும்’ என்றும் Klaus Wedekind தெரிவித்துள்ளார்.

Related posts: