ஜேர்மனியில் வைத்தியரை சுட்டுக் கொன்ற நோயாளி!

Wednesday, July 27th, 2016

ஜேர்மனியில் உள்ள பெஞ்சமின் பிரான்க்லின் வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் வைத்தியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஸ்டெக்லிட்ஸ் மாவட்டத்தில் உள்ளது பெஞ்சமின் பிரான்க்லின் பல்கலைக்கழக வைத்தியசாலையில் நேற்றுக்காலை 11 மணிக்கு நோயாளி ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வைத்தியரை ஒருவரை சுட்டுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த வைத்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 2 மணிநேரம் கழித்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதற்கிடையே வைத்தியரை சுட்ட அந்த நோயாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.குறித்த சம்பவத்தால் வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்திற்கும், தீவிரவாதத்திற்கும் தொடர்பு இல்லை எனவும்,வைத்தியசாலை வளாகத்தில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் வைத்தியசாலையில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

369A956D00000578-3708725-image-a-95_1469542338307

369A9FFC00000578-3708725-image-a-94_1469542284960

369A88E800000578-3708725-image-a-92_1469541993742

Related posts: