ஜேர்மனியில் மழை வெள்ளம் காரணமாக 88 பேர் பலி !

Friday, July 16th, 2021

பேரழிவை ஏற்படுத்தியுள்ள மழை வெள்ளம் காரணமாக ஜேர்மனியில் 88 பேர் பலியாகியுள்ள அதேவேளை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

81 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் காணாமல்போயுள்ள 1300 பேரை தேடிவருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

50 முதல் 60 பேர் காணாமல்போயுள்ளனர் என கருதுகின்றோம் அவர்கள் இதுவரை திரும்பி வரவில்லை என்றால் உயிரிழந்துள்ளனர் என்பதே அர்த்தம் என இன் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் தீயணைப்பு படைவீரர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள்வெளியாகியுள்ளன.

ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து பகுதியில் நகரங்கள் கிராமங்கள் முற்றாக அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன.

Related posts: