ஜேர்மனியில் பொது இடங்களில் பர்கா அணிய நிரந்தர தடை?  

Thursday, August 11th, 2016

ஜேர்மனி பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் பர்கா அணிய நிரந்தர தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

ஜேர்மனியில் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, ஆளும் கட்சியான கிறித்துவ ஜனநாயக கட்சி இன்று நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்கிறது.

பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் முழு உடலையும் மறைக்கும் பர்கா அணிய தடை விதிக்க இந்த மசோதா வலிறுத்தும். இது மட்டுமின்றி தற்போதுள்ள பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொது பேருந்துகள் நிலையங்களில் வீடியோ கமராக்களை பொருத்தவும் இந்த சட்ட மசோதா வழிவகை செய்யும்.

இன்று நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அந்நாட்டு உள்துறை அமைச்சரான Thomas de Maiziere தாக்கல் செய்கிறார். இந்த மசோதாவை அனைத்துக்கட்சிகளும் ஏற்றுக்கொண்டால், அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு பின்னர் இச்சட்டம் நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்படும்.

பிரான்ஸில் இச்சட்டம் கடந்த 2010ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது ஜேர்மனியும் இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: