ஜேர்மனியில் தீவிரவாத அச்சுறுத்தலை தடுக்க திட்டம் !

ஜேர்மனி நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து Ankle bracelets என்னும் மின்னணு கருவி மூலம் அவர்களை கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஜேர்மனி நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமாகி வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19ஆம் திகதி பெர்லின் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் ஒருவன் லொறியுடன் புகுந்தான். ஐ.எஸ் தீவிரவாதியான அவன் லொறியை விட்டு மக்கள் கூட்டத்தில் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
இப்படி தீவிரவாத செயல்கள் அங்கு நடைபெறுவதால் அதற்கு ஒரு விடயத்தை அந்நாட்டு மேற்கொண்டுள்ளது. அதன்ப்படி, Ankle bracelets என்னும் மின்னணு கருவியை உபயோகப்படுத்த ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இந்த கருவியை உபயோகப்படுத்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை சரியாக கணிக்கவும், கண்காணிக்கவும் முடியும்.
அரசு இந்த விடயத்தை செய்ய முடிவெடுத்து விட்டாலும், ஜேர்மனி நாட்டின் நாடாளுமன்றத்தின் இதற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|