ஜேர்மனியில் குண்டுத் தாக்குதல் – தாக்குதல்தாரி பலி!!

Monday, July 25th, 2016
ஜெர்மனியின் தெற்கு பகுதியில் நிகழ்ந்த ஒரு இசை நிகழ்ச்சியின்போது, குண்டு வெடிப்பு ஒன்றை நிகழ்த்திய சிரியா நாட்டினர் ஒருவர், இறந்ததுடன் 12 பேரையும் காயப்படுத்தியுள்ளார்.

ஒரு வாரத்தில் பவாரியாவில் நடைபெற்றுள்ள இந்த மூன்றாவது வன்முறை தாக்குதலில், இருபத்தி ஏழு வயதான இந்த தாக்குதல்தாரி, அன்ஸ்பக் நகரில் நிகழ்ந்த அந்த இசை நிகழ்வில் அனுமதி மறுக்கப்பட்ட பிறகு, அவருடைய முதுகுப்பையில் சுமந்து கொண்டு வந்திருந்த வெடி பொருட்களை வெடிக்க செய்துள்ளார்.

இந்த சிரியா நாட்டவருக்கு ஓராண்டுக்கு முன்னால் தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்காலிகமாக தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று பவாரியன் உள்துறை அமைச்சர் யோகாகீம் ஹெர்மாண் தெரிவித்திருக்கிறார்.இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதற்கான நோக்கம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று அவர் கூறினார்.

இந்த நபர் இதற்கு முன்னர் இரண்டு முறை தற்கொலை செய்துகொள்ள முயன்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: