ஜேர்மனியில் கத்திக்குத்து சம்பவம் மூவர் பலி – ஆபத்தான நிலையில் ஐவர்!

Saturday, June 26th, 2021

ஜேர்மனியின் Wuerzburg நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

நீண்ட கத்தியை பயன்படுத்தி நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்,பொலிஸார் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு அவரை காயப்படுத்தி கைதுசெய்துள்ளனர்.

மூவர் கொல்லப்பட்டுள்ளனர் ஐவர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள பொலிஸார் கடுமையாக காயமடைந்தவர்கள் உயிர் தப்புவார்கள் என உறுதியாக தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.

தனியொரு நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நகரின் மத்தியில் உள்ள பார்பரோசா சதுக்கத்தில் கத்தியுடன் நபர் ஒருவர் காணப்படுவதாக தகவல் கிடைத்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்தியுடன் நபர் ஒருவரை பொலிஸார் அழைத்து செல்வதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகியுள்ளன.

000

Related posts: