ஜேர்மனியின் ஜனாதிபதியாக பிரான்ங் வால்ட்டர் ஸ்டெய்ன்மையர் தெரிவு!

Tuesday, February 14th, 2017

ஜேர்மனியின் புதிய ஜனாதிபதியாக பிரான்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier ) தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புச் சபையால் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஜனநாயகவாதியான இவர், ஜேர்மனியின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்க முன்பு ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வால்ட்டருக்கு ஆதரவாக 931 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜேர்மனியின் தற்போதைய ஜனாதிபதி  ஜோச்சிம் கோக் எதிர்வரும் மார்ச் 18 ஆம் திகதி  உத்தியோகபூர்வமாக  வால்ட்டரிடம் பதவியை கையளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Frank-Walter-Steinmeier-germany-1024x824