ஜெர்மனியின் அதிபராக ஏஞ்சலா மேர்க்கல் பதவி பிரமாணம்!

Thursday, March 15th, 2018

ஜேர்மனியின் அதிபராக ஏஞ்சலா மேர்க்கல் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். ஜேர்மனியின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், அதிகபடியான வாக்குகள் மீண்டும் அவர் பதவி வகிப்பதற்கு ஆதரவாக பிரயோகிக்கப்பட்டிருந்தன.

இதன்படி, கடந்த பிராந்திய தேர்தலின் பின்னர், ஜேர்மனியில் ஏற்பட்டிருந்த அரசியல் ஸ்திரமற்றத் தன்மை, முடிவுக்கு வந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் இந்த வெற்றியின் மூலம், ஏஞ்சலா மேர்க்கல் அந்த நாட்டின் அரசாங்கத்தில் ஏற்படுத்தவிருப்பதாக அறிவித்திருந்த மறுசீரமைப்பை அமுல்படுத்த சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts: