ஜெரூஸலம் விவகாரத்தில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா!

Sunday, January 21st, 2018

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்வதாக  தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்துள்ளது.

 இந்த யோசனை எகிப்தினால் கொண்டுவரப்பட்டுள்ளதோடு இதற்கு ஆதரவாக 14 நாடுகள் வாக்களித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐநாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹய்லி கருத்து வெளியிட்டிருந்ததுடன் இது அமெரிக்காவை அவமானப்படுத்தும் செயல் என்றும்; தெரிவித்துள்ளார்;.

தாம் இதை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.இதேவேளை பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் ஐநா அமைப்பில் அவசர கூட்டம் ஒன்றை கூட்டுவதற்கு தீர்மானித்திருந்தார். இதன்போது ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் புதிய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Related posts: