ஜெருசலத்தில் பாலஸ்தீனியர்கள்  மேற்கொண்ட போராட்டத்தில் பலர் பலி!

download (4) Wednesday, May 16th, 2018

ஜெருசலத்தில் திட்டமிட்டபடி அமெரிக்க தூதுவராலயம் திறக்கப்பட்டதற்கு பாரிய எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனியர்கள்  மேற்கொண்ட போராட்டத்தில் 55 பாலஸ்தீனியர்கள்கொல்லப்பட்டுள்ளதுடன் 2700 பேர் காயமடைந்துள்ளனர்.

காசா பள்ளத்தாக்கில் 2014 ஆம் ஆண்டின் பின்னர் நடந்த பாரிய வன்செயல் உடனான உயிரிழப்பு இதுவென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஜெருசலத்தில் அமெரிக்க தூதுவராலயம் திறக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.

இஸ்ரேல் இறைமையை கொண்ட நாடு என்பதனை சகலரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன் அவர்கள் விரும்பும் பிரதேசத்தை தலைநகராக்குவதற்கானஉரிமையையும் கொண்டுள்ளனர் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.