ஜெய்பூரில் சோகம் – 24 பேர் பலி!

Thursday, May 11th, 2017

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற ஒரு திருமண கொண்டாட்டத்தின் போது சுவர் ஒன்று சரிந்து விழுந்ததில்  20க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்களில் குழந்தைகள் பலர் அடங்குவார்கள் என கூறப்படுகிறது.

திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஒரு கடும் சூறைக்காற்று வீசியதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி அனில் டாங்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விருந்தினர்கள் கொட்டகை ஒன்றின் கீழ் பாதுகாப்பாக ஒதுங்கிய நேரத்தில், நான்கு மீட்டர் உயரம் கொண்ட சுவர் மற்றும் தகரத்தலான கூரை அவர்கள் மீது சரிந்து அதில் பலரும் சிக்கிக்கொள்ள காரணமாக இருந்தது.

சுவரை ஒட்டிய பகுதிகளில் உணவு கடைகள் அமைக்கப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.