ஜெயலலிதா பாணியில் பன்னீர் செல்வம்!

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு, முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் , அவைத்தலைவர் மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் முதல்வர் பன்னீர் செல்வம் சந்தித்துள்ளார்.
எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால், சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனுடன் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்துள்ளார்.
தமிழத்தின் அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளார். ஆளுநர் சந்திப்புக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம், அம்மாவின் நல்லாசியோடு ஆளுநரை சந்தித்து அனைத்து விடயங்களை விரிவாக பேசி வந்துள்ளோம். உறுதியாக நல்லது நடக்கும். தர்மம் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் என்று கூறியுள்ளார்.
பன்னீர் செல்வத்துக்கு அடுத்தபடியாக இரவு 7.30 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்கவிருக்கிறார் ஆளுநர்.
Related posts:
|
|