ஜெயலலிதா கச்சதீவை மீட்பார்- ஸ்டாலின் நம்பிக்கை!
Monday, June 6th, 2016கச்சதீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காயிதே மில்லத்தின் 121-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையடுத்து, சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள வாலாசா பெரிய பள்ளிவாசலில் உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் காயிதே மில்லத். அதேபோல், சிறுபான்மையினர் நலன் மற்றும் தமிழர்களின் நலனை காக்க தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நலனுக்காக போராடும் இயக்கம் தி.மு.க. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கச்சதீவை மீட்போம் என கூறியிருந்தனர். அதன்படி கச்சதீவை மீட்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் என்றார்.
– Vikatan
Related posts:
|
|