ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரப் கூட்டத்தில் இருவர் பலி!
Friday, April 22nd, 2016சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தபோது, அதில் பங்கேற்ற இருவர் மரணமடைந்தது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மகுடஞ்சாவடிக்கு அருகில் உள்ள கூத்தாடிபாளையம் என்ற இடத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கென காலை 11 மணியிலிருந்தே தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர். இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.பெரியசாமி, கூத்தாண்டிபாளையத்தைச் சேர்ந்த எஸ்.பச்சியண்ணன் ஆகியோர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் தற்போது வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிக அளவாக 107.3 டிகிரி வெயில் அடிந்த நிலையில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்ததோடு, தேர்தல் முடிந்த பிறகு நிதியுதவி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
Related posts:
|
|