ஜி20 மாநாட்டில் உலக பொருளாதாரத்தை பலப்படுத்த தலைவர்கள் உறுதி!

சீனாவில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் உலக பொருளாதாரத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்த உறுப்பு நாடுகள் உறுதி பூண்டுள்ளன. புதிய யுத்திகளை புகுத்தப்போவதாகவும் ஜி 20 உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
சீன நகரான காங் ஜோவில் நடைபெற்ற உச்சி மாநாட்டை நடத்திய சீனாவின் அதிபர் ஷின் ஜிங்பிங், உலக வர்த்தகத்தை ஊக்கப்படுத்தவதாக உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். எஃகு போன்ற மூலப் பொருட்களின் அதிகப்படியான உற்பத்தியை கையாள உறுதியுடன் இருப்பதாக அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டீன் லெகார்ட், நெடுங்காலமாக உலக பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ளதாகவும், ஜி 20 உறுப்பு நாடுகள் அதை உயர்த்த அனைத்து முறைகளை கையாள ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பிரித்தானியாவில குடியேற காலக்கெடு நிர்ணயம்!
சிரிய போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை!
தீவிரவாத குழுக்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை - அமெரிக்க வெளிவிவகார செயலாளர்!
|
|