ஜி 7 மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்!

Saturday, April 9th, 2016

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி 7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா சமாதான ஞாபகார்த்த பூங்காவில் வாகனங்களை மறித்து பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜி 7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டின் முக்கிய நிகழ்வு நடைபெறும், க்ரான் பிறின்ஸ் ஹோட்டலின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஹோட்டலுக்கு முன்னால் பல வீதி சோதனைச் சாவடிகளை பொலிஸார் அமைத்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பிரதேசவாசிகளும் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: