ஜி-7 மாநாட்டில் சர்ச்சைக்குரிய விவாதம்!

Sunday, May 28th, 2017

ஜி-7 தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை காலநிலை மாற்றம் குறித்த சர்ச்சைக்குரிய விவாதத்தை கொண்டிருந்ததாக ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்கான ஜி-7 மாநாடு இத்தாலி டார்மினா நகரில் நடைபெறுகின்ற நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேர்க்கல் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, 2015 ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை உடன்படிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் ஜி-7 தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாக மேர்க்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ வர்த்தகம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விவாதங்கள் இன்னமும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன. காலநிலை பாதுகாப்பு குறித்து நாம் அமெரிக்காவுடன் பேசியுள்ளோம். அத்துடன் எதிர்கால வேலைவாய்ப்பு சந்தை வளங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்

Related posts: