ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் சீன ஜனாதிபதி!

அடுத்த வாரம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) கலந்து கொள்வார் என சீன அரச செய்தி ஸ்தாபனம் சின்ஹூவா தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 27 முதல் 29 ஆம் திகதிவரை ஜப்பானின் ஒசாக்கா நகரில் நடைபெறும் உச்சி மாநாட்டிற்காக செல்லும் சீன ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து உரையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க-சீன வர்த்தக நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
சீனாவின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பல் ஹொங்கொங்கில் பயற்சி!
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு முக்கிய வல்லரசுகள் பங்காற்றும்!
தண்ணீர் உள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
|
|