ஜாவா கடலில் விழுந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!

இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய ஏர் லயன் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘ஏர் லயன்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 189 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. 115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடக்கக் கூடும் என கூறப்பட்ட நிலையில் ஏர் லயன் விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.
Related posts:
புதிய ஆண்டு பயணத்தை ஆரம்பித்து கடந்த ஆண்டில் தரையிறங்கிய விமானம்!
13,000 ஈராக்கியர் மொசூல் நகரிலிருந்து வெளியேற்றம்!
இந்தோனேசியாவில் கோர விபத்து: 27 பேர் உயிரிழப்பு!
|
|