ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நானே தொடங்கி வைப்பேன்- ஓ. பன்னீர்செல்வம்!

வாடிவாசலில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நானே தொடங்கி வைப்பேன் என்று சென்னை திரும்பிய தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இருந்து இன்று மதியம் சென்னை திரும்பிய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தபொதே இவ’;வாறு தெரிவித்துள்ளார்.
அப்போது, நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும். வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களிடம் இருந்து ஒப்புதல் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்களின் எண்ணப்படி வாடிவாசலில் காளைகள் துள்ளிக் குதித்து ஓடும். வாடிவாசலில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நானே தொடங்கி வைப்பேன் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊடகமே அமெரிக்கர்களின் எதிரி சொல்கிறார் டொனால்ட் ட்ரம்ப்!
கத்தாருக்கு 5 விமானங்களில் உணவு அனுப்பியது ஈரான்!
ஏவுகணைகளை சோதனை செய்ததா வடகொரியா..?
|
|