ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை

Tuesday, July 4th, 2017

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் தீவிரவாதிகள்  இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

புல்வாமா மாவட்டத்தின் பஹ்ம்னூ பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் குறிப்பிடுகின்றன.

Related posts: