ஜமால் கொலை – சவுதி இளவரசரே காரணம் என்கிறது அமெரிக்க செனட்!

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலையுடன் சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் தொடர்புபட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது.
சீ.ஐ.ஏ. பிரதானி ஜீனா ஹெஸ்பெல் இனது கருத்துக்களுக்கு பின்னர் குறித்த கொலை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறே சவூதி அரசின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் கொடூரமான நபர் என்றும் செனட் தெரிவித்துள்ளது.
ஜமால் கஷோக்கியின் கொலை போன்ற கொடூரமான நடவடிக்கைகளை தமது அரசு ஏற்காது என அமெரிக்கா, சவூதி அராபியாவுக்கு தெரிவித்திருந்ததாகவும் அமெரிக்க செனட் தெரிவித்துள்ளது.
Related posts:
பிரித்தானியா உள்துறை செயலாளர் பதவி இராஜினாமா!
துருக்கி அதிபர் தேர்தல்: எர்டோகன் வெற்றி!
வளைகுடா பிரஜைகள் சவுதிக்குள் நுழைய தடை !
|
|