ஜப்பான் சென்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!

Friday, June 28th, 2019

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அங்கு நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மோடி ஜப்பான் சென்றுள்ளார்.

இந்த மாநாட்டுக்கு மேலதிகமாக அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உள்ளிட்டவர்களையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் ஒசாகாவில் இன்றும் நாளையும் கறித்த மாநாடு நடைபெறவுள்ளது.

பிரதமர் மோடி கலந்து கொள்கின்ற ஆறாவது ஜீ20 மாநாடு இதுவாகும். ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜப்பானில் புதிய பேரரசரின் ரீவா சகாப்தம் தொடங்கிய பிறகு, இரு தலைவர்களிடையே நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் நலன்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். ஒக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ள புதிய மன்னரின் முடிசூட்டு விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பார் என்ற தகவலை மோடி தெரிவித்தார்.

Related posts: