ஜப்பானை தாக்கவுள்ள சூறாவளி: விமானங்கள் இரத்து!

Tuesday, August 30th, 2016

ஜப்பானின் வட கிழக்கு கடற்கரையை ஒரு மிக பலமான சூறாவளி நெருங்கி வருவதால், அங்கு நூற்றுக்கும் மேலான செய்யப்பட்டுள்ளன.

மேலும், கடற்கரையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் லயன்ராக் என்ற இந்த சூறாவளி, ஜப்பானின் வட கிழக்கில் உள்ள டோஹோகு பகுதியை, இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த பூகம்பம் மற்றும் சுனாமியினால், இப்பகுதி பலத்த சேதத்தை சந்தித்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு சேதமடைந்த ஃபுகுஷிமா அணு உலையை நடத்தி வரும் டோக்கியோ மின் சக்தி நிறுவனம் தனது வெளிப்புற செயல்பாடுகள் பலவற்றை இடைநிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Related posts: