ஜப்பானுக்கு மேலாக ஏவுகணையை செலுத்தியது வடகொரியா!

Wednesday, August 30th, 2017

வடகொரியா செலுத்திய ஏவுகணை ஒன்று கடலில் வீழ்வதற்கு முன்னர் கிழக்கு ஜப்பானுக்கு மேலாக பயணித்துள்ளதை அமெரிக்காவின் பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஏவுகணையானது கடலில் வீழ்வதற்கு முன்னர் மூன்று பாகங்களாக முறிவடைந்துள்ளது. இந்நிலையில், குறித்த ஏவுகணையை தடுப்பதற்கு ஜப்பான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனினும், வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனையை அடுத்து பாதுகாப்பு கருதி ஜப்பான் அரசு அந்நாட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த ஏவுகணை ஜப்பான் வான் பரப்பை கடந்து சென்றமையால் பதற்றமடைந்த அந்நாட்டு அரசு உடனடியாக எச்சரிக்கை செய்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது.எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முறையாக ஜப்பான் வான் பரப்பை கடந்து செல்லும் வகையில் ஏவுகணை சோதனை ஒன்றை வடகொரியா நடத்தியுள்ளது.

இதேவேளை, உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: