ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு!

Monday, April 20th, 2020

ஜப்பானின் கிழக்கு கடற்கடை பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ஹோன்ஷு தீவின் மியகி மாகாணம் உள்ளிட்ட ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பசுபிக் பெருங்கடலில் 41 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை என்பதுடன், ஆனால், நிலநடுக்கத்தின் தாக்கம் சற்று குறைவாக இருந்த காரணமாக ஜப்பானில் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: