ஜப்பானில் அதிகரித்து வரும் வயதானவர்களின் எண்ணிக்கை!

Tuesday, September 20th, 2016

ஜப்பானின் அண்மைய மக்கள் தொகை கணக்கெடுப்பில், நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

65 வயதிற்கும் மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை அதில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.34 மில்லியனுக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள், 65 வயதிற்கு அதிகமானவர்களாக உள்ளனர்; அது மக்கள் தொகையில் மொத்தம் 27 சதவீதமாகும்.

இதில் பெரும்பாலானோர் தங்களின் பணி ஓய்வை தாமதப்படுத்துகின்றனர். 65-69 வயதிற்குட்பட்ட பாதியளவு ஜப்பானியர்கள் தங்கள் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.அதே வயதுடைய மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட ஜப்பானியப் பெண்களும் பணிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

_91301415_150717110544_old_people__512x288_afp

Related posts: