ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு – 42 வயதான சந்தேக நபரொருவர் கைது!

Friday, July 8th, 2022

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது இனந்தெரியாத நபரொருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஜப்பானின் மேற்கு நகரான நாராவில் கூட்டமொன்றில் கலந்துகொண்டு, அவர் உரையாற்றிய போது, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அவருக்கு பின்னால் இருந்த சந்தேகநபர் பிரதமரை நோக்கி இரண்டு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் 42 வயதான சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: