ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி வெளியானது!
Friday, June 9th, 2017இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணும் நடவடிக்கை ஜூலை 20ஆம் திகதி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையாளர் நசீம் ஜைதி அறிவித்துள்ளார்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 28ஆம் திகதி என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு வேட்பு மனுக்கள் மீதான மறுபரிசீலனை ஜூன் 29ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளதோடு, வேட்புமனுக்களை திரும்ப பெற அடுத்த மாதம் ஜூலை 1ஆம் திகதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் வாக்குப் பதிவானது காலை 10 மணி முதல் மாலை 05 மணிவரை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
போர் நிறைவடைந்த போதிலும் மொசூலில் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்கின்றன - ஐ.நா.
பிரெக்சிட் விவகாரம்: மேலும் தாமதப்படுத்த தீர்மானம் !
உலக இருதய தினம் இன்று!
|
|