ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டது – ட்ரம்ப் அதிரடி!

2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் முடிவை தாம் ஏற்றுக் கொள்வதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
முன்னர் பின்லாந்தில் வைத்து ரஷ்ய ஜனாதிபதி புட்டினை சந்தித்த பின்னர், அமெரிக்கப் புலனாய்வு அறிக்கைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது, ரஷ்யாவின் தலையீடு இருக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் வார்த்தை பிரயோகத்தில் தவறு ஏற்பட்டிருப்பதாகவும், தலையீடு இருக்கவில்லை என்பது இருந்திருக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்திருப்பதுடன், வேறு சக்திகளும் செயற்பட்டிருக்கலாம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
“தயவுசெய்து எனக்கு உதவுங்கள்" - பத்திரிகையாளர் வேண்டுகோள்!
நிலக்கரி சுரங்க விபத்தில் 13 பேர் உயிரிழப்பு!
குஜராத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் மத தீவிரவாதிகள் இல்லை - பாது...
|
|