சோமாலியாவில் 18 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை!

Tuesday, July 11th, 2017

தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட 18 கிளர்ச்சியாளர்களை சோமாலியாவில் சுட்டுக் கொன்றுள்ளதாக சோமாலியா இராணுவம் அறிவித்துள்ளது.

சோமாலியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அல் கொய்தா, அல் ஷபாப் ஆகிய தீவிரவாத இயக்கங்களின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் குழு செயல்பட்டு வருகின்றது.

அரசுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத தாக்குதல்களையும் இந்த இயக்கம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின் போது 18 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சோமாலியாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சோமாலியா இராணுவம் தெரிவித்துள்ளது.

Related posts: