சோமாலியாவில் தொடரும் சோகம் : வயிற்றுப்போக்கால் 500க்கும் மேற்பட்டோர் பலி!

Saturday, April 15th, 2017

சோமாலியாவில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து காலாரா மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாக 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மோசமான வறட்சியில் சோமாலியா தவித்து வருகிறது.இதன்காரணமாக, பாதுகாப்பற்ற தண்ணீரை குடிக்கும் நிலைக்கு மக்களை தள்ளப்பட்டுள்ளனர். மொத்த சனத்தொகையில் பாதிக்கும் அதிகமானோருக்கு மனிதாபிமான உதவிகள் அவசர தேவையாக உள்ளது. மேலும், நன்கொடையாளர்களும் நிதி திரட்ட திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Related posts: