சோமாலியாவில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 17 பொலிஸார் பலி!

Friday, December 15th, 2017

சோமாலியாவில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியத் தலைநகர் மொகதீசுவில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தை இலக்கு வைத்து இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 17 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவு இயக்கமான அல் சபாப் தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸ் உடை அணிந்து பயிற்சி நிலையத்தினுள் நுழைந்த நபர், தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

Related posts: