சோகத்தில் மூழ்கிய சனத் ஜெயசூரியா!
Sunday, December 11th, 2016
அசல குணரத்னேவை தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்காதது தனக்கு வருத்தமளிப்பதாக தெரிவுக் குழுத்தலைவர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி தென் ஆப்பிரிக்காவில் உள்ள Port Elizabeth, St George’s Park மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் விளையாடவுள்ள வீரர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த அணி தனக்கு முழு நிறைவை அளிக்கவில்லை என்று இலங்கை அணியின் தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சனத் ஜெயசூரியா கூறுகையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சகலதுறை வீரரான அசல குணரத்னே சேர்க்கப்படாதது துரதிர்ஷ்டமானது.
15 வீரர்களை மட்டுமே தெரிவு செய்ய முடியும். இதில் 10 துடுப்பாட்ட வீரர்களை மட்டுமே தெரிவு செய்ய முடியாது. மேத்யூஸ் மற்றும் சந்திமால் அணிக்கு திரும்பி உள்ளனர்.அதேசமயம் அசல குணரத்னே மற்றும் டிக்வெல்ல இருவரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டனர்.
இருப்பினும் குணரத்னேவை இந்த தொடரில் சேர்க்காதது எனக்கு வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.
Related posts:
|
|