செல்லிடப்பேசிகளுக்குத் தடை!
Tuesday, September 4th, 2018பிரான்ஸ் பள்ளிகளில் செல்லிடப்பேசிகளுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு உருவாக்கியுள்ள புதிய சட்டத்தில், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைவேளை நேரம் உள்பட நாள் முழுவதும் செல்லிடப் பேசிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், பேரிடர் காலங்களிலும், மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கும் இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்கள் தங்களது செல்லிடப் பேசிகளை அணைத்து வைப்பதுடன், அதனை பாதுகாப்பு அறையில் வைத்துப் பூட்ட வேண்டும் என்று அந்தச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை உயர் நிலைப் பள்ளிகளும் தாமாகவே முன்வந்து செயல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி யாரும் செல்லிடப் பேசியைப் பயன்படுத்தினால், அதனை பறிமுதல் செய்யும் அதிகாரம் புதிய சட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அமைச்சர் ஜீன்-மேக்கேல் பிளாங்கர் கூறியதாவது:
மாணவர்கள் பாடங்களில் முழு கவனம் செலுத்துவதை உறுதி செய்வதற்காக, அவர்களது செல்லிடப் பேசிப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, சமூகத்தினருடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும் இந்தத் தடைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றார்அவர்.
Related posts:
|
|