செல்பி மோகத்தால் பறிபோன ஏழு உயிர்கள் – இந்தோனேசியா ஜாவா தீவில் சம்பவம்!

Monday, May 17th, 2021

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் செல்பி எடுக்க முயன்றதால் படகு கவிழ்ந்து ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் 20 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
படகு நடுக்கடலில் சென்றபோது அனைவரும் ஒரு இடத்தில் நின்று செல்பி எடுக்க விரும்பியுள்ளனர்.
அதன்படி அனைவரும் ஒரேபக்கம் செல்ல, படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய ஜாவா பொலிஸ் உயர் அதிகாரி அதிகமானோர் பயணம் செய்ததே விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டம் சுமார் 17ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ளது. இதனால் இந்தோனேசியாவில் படகு விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றது.
ஏப்ரல் மாதம், மேற்கு ஜாவாவில் இரண்டு படகுகள் மோதியதில் 17 மீனவர்களைக் கண்டுபிடிக்க விரைந்தனர். தேடுதலில் மூன்று பேர் இறந்து கிடந்தனர், மேலும் 13 பேரைஇன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: