செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறையில் இருந்த 3 பேர்!

Thursday, November 28th, 2019

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று கறுப்பினத்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

14 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் ஆல்ஃபிரட், ஆண்ட்ரூ மற்றும் ரான்சம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை 1984 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மூன்று பேரையும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்துள்ளனர்.

1983 ஆம் ஆண்டு டிவிட் டக்கெட் எனும் பதின்ம வயது சிறுவன் பள்ளி செல்லும் வழியில் கொல்லப்பட்டான். இது அப்போது ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாகத்தான் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Related posts: