செயற்கை அறிவு உருவாக்கம் தான் வரலாற்றின் கடைசி நிகழ்வாக அமையும்:  ஹாக்கிங் எச்சரிக்கை!

Thursday, October 20th, 2016

செயற்கை அறிவு உருவாக்கம் தான் அனைத்திலும் பெரியதாகவும் நாகரீக வளர்ச்சியின் வரலாற்றில் நடைபெறும் கடைசி நிகழ்வாகவும் இருக்கும் என பிரித்தானிய விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

பருவ நிலை மாற்றம் போன்ற பிரச்சினையை எதிர்கொள்ளவும் நோய் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கும் செயற்கை அறிவு பயன்படும் என பேராசிரியர் ஹாக்கிங் தெரிவித்துள்ளார். ஆனால், அதே சமயத்தில் அவை தானியங்கி ஆயுதங்களைக் கொண்டுவரக்கூடும் என்றும் பொருளாதாரத்தில் சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தானியங்கி கார்களுக்கான விதிகளை ஆராயவும் ரோபோக்கள் முதியவர்களைக் கவனித்துக்கொள்ளக்கூடுமா என ஆராயவும் புதிய ஆய்வமைப்பொன்று பிரித்தானியாவில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஹாக்கிங் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Prof_Stephen_Hawki_3524962b

Related posts: