செப்டம்பரில் பங்களாதேஷ் செல்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர்!

Wednesday, August 9th, 2017

 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் செப்டம்பர் மாதம்பங்களாதேஷ் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ்- இந்திய கூட்டு ஆலோசனை ஆணையக கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் அவரது விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவருடைய பங்களாதேஷ் விஜயத்திற்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. சுஷ்மா சுவராஜின் இந்த விஜயம் பங்களாதேஷிற்கான இரண்டாவது விஜயமாகும். முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: