சென்னை உயர் நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம்!

வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்களை திரும்பப் பெற வேண்டுமென கோரி, வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நீதிமன்றத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று (25) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியும் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த போதும், வழக்கறிஞர்கள் தடுப்பரண்களையும் மீறி உயர் நீதிமன்றத்துக்குள் நுழைய முற்பட்டனர்.
அப்போது, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் பலர் ஈடுபட்டனர். அவர்களை அமைதிப்படுத்தும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் பிறர் தொடர்ந்து ஆர்ப்பாடம் நடத்தி வருகின்றனர்.
ஜூன் முதலாம் தேதி தொடங்கி வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள்.தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை கைவிட, இந்திய பார் கவுன்சில் ஜூலை 22 தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது.
அதற்கு பின்னரும் முற்றுகை போராட்டங்கள் உள்பட பல போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியானதால், தமிழகத்தைச் சேர்ந்த 105 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது.நாட்டின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் அவர்கள் வழக்காட தடையும் விதித்துள்ளது.
வழக்கறிஞர்களின் போராட்டத்தால் சென்னை பாரிமுனையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Related posts:
|
|