சென்னையிலிருந்து 29 பேருடன் சென்ற விமானம் திடீர் மாயம்!!

Friday, July 22nd, 2016

சென்னை தாம்பரம் விமானநிலைத்திலிருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்னவென தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானுக்கு ஏ.என்.32 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது காலை 8 மணியளவில் திடீரென விமானப் படை தளத்தின் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

நடுவானில் மாயமான விமானத்தைத் தேடும் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்ன என்று தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related posts: