சூடானில் பணிப்புறக்கணிப்பு – விமானங்கள் இரத்து!

Wednesday, May 29th, 2019

சூடானில் சிவில் ஆட்சி ஏற்படுத்த வலியுறுத்தி நாடு தழுவிய பொது பணிப்புறக்கணிப்பில் விமான நிலைய ஊழியர்களும் பங்கேற்றதால் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிவில் ஆட்சி ஏற்படுத்த வலியுறுத்தி 48 மணிநேர பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் அழைப்பு விடுத்தனர். அதன்படி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் தொடங்கியது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். துறைமுகங்கள், எண்ணெய் வயல் சார்ந்த நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, விமான நிலைய ஊழியர்களும் வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏராளமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts: