சுவிஸில் பறவை காய்ச்சல்?
Saturday, November 12th, 2016சுவிட்சர்லாந்தில் கான்ஸ்டன்ஸ் ஏரியில் 80 காட்டு பறவைகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தை தொடர்ந்து கோழிகளுக்கும் அந்நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது வரை H5N8 வைரஸ் காட்டு வாத்து மற்றும் கொக்குகளை தாக்கியுள்ளது. இந்நோய் வளர்க்கப்படும் கோழிகளுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா ஜேர்மனி நாடுகள் இதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கான்ஸ்டன்ஸ் ஏரியை சுற்றி ஒரு கிலோ மீற்றர் சுற்றளவு பாதுகாப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பண்ணைகள் உள்ள கோழிகள் வெளியே அனுப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சூரிச் எரி உட்பட பல ஏரிகளை கண்காணித்து வருகின்றனர்.H5N8 வைரஸ் தொற்று குளிர்காலத்தில் தெற்கிலிருந்து புலம்பெயர்ந்த பறவைள் மூலம் பரவுகிறதாக கண்டறியப்பட்டுள்ளது.
H5N8 வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பரவும் என எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என கூறப்படுகிறது. எனினும், இறந்து கிடக்கும் பறவைகளை பார்க்கும் மக்கள் அதை தொட வேண்டாம் என வலியுத்தப்பட்டுள்ளது.
Related posts:
|
|