சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு கோரும்  இலங்கையர்கள்!

Friday, December 15th, 2017

இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு சென்ற 146 இலங்கையர்கள் அந்நாட்டில் அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாக சிங்களஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, 146 இலங்கையர்களும் இவ்வருடமே சுவிட்சர்லாந்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இல்லாத நிலையில் அரசியல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

இவ் இலங்கையர்கள் போலியான மரண அச்சுறுத்தல்களை காட்டி அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ் வருடத்தில் 8315 வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கேட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Related posts: