சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட புயலால் பல மில்லியன்கள் இழப்பு!

Friday, June 1st, 2018

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட புயலால் குடிநீரில் கழிவு நீர் கலந்ததோடு பல மில்லியன்கள் அளவுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரமாக வீசி வரும் புயலால் சுவிட்சர்லாந்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  பல இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை இரவு நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பயங்கர மழையும் ஆலங்கட்டி மழையும் புயலும் புரட்டியெடுத்தன. பெரும்பாலான சேதம் ஆலங்கட்டி மழையினால் ஏற்பட்டுள்ளதாக காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கழிவு நீர் அமைப்புகள் நிரம்பி வழிகின்றன.

புயலால் ஏற்பட்ட பாதிப்பு 4 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் அளவிற்கு சேதத்தை உண்டு பண்ணியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: