சுவிசர்லாந்தில் அணு உலைகளை மூடுவதற்கான வாக்கெடுப்பு!

Sunday, November 27th, 2016

சுவிஸ்சர்லாந்தில், அணு உலையை படிப்படியாக மூடுவதற்கான கடுமையான கால அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்பது குறித்து மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

நாட்டின் ஐந்து அணு உலைகளை மூடும் திட்டத்தை சுவிஸ்சர்லாந்தில் அரசு அறிவித்தது; ஆனால், அதை செயல்படுத்துவதற்கான தேதியை அறிவிக்கவில்லை. அவ்வாறு அணு உலைகளை உடனடியாக மூடுவது, மின் தட்டுபாட்டிற்கு வழிவகுக்கும் என வர்த்தக தலைவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் 45 வருடங்களுக்கு மேலான காலம் செயல்பட்டுள்ள எந்த ஒரு அணு உலையும் செயல்படக்கூடாது என எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அதன்மூலம் குறைந்தது இரண்டு அணு உலைகளை உடனடியாக மூட வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளனர்.

_92679497_160606094406_switzerland1

Related posts: