சுவாதியின் பெற்றோர் தலைமறைவா?

நுங்கம்பாக்கத்தில் ஜீன் 24 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் தலைமறைவாக உள்ளதாக தமிழச்சி தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
தனது மகள் இறந்தவுடன் கதறிய குடும்பத்தினர், தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் சிலரை சந்தித்து, தனது மகளின் கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்கள்.
ஆனால், அதன் பின்னர் தங்கள் மகளை பற்றி ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டபோதும், அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வந்தார்கள்.
இந்நிலையில், தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில், சுவாதியின் பெற்றோர் தலைமறைவு.அவர்களாகவே சென்றார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா? அல்லது யாருடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள்? பல நாட்களாக வீடு பூட்டப்பட்டுள்ள மர்மம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Related posts:
எந்நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் -வடகொரியா !
ரஷ்ய ஜனாதிபதி புடின் அதிரடி உத்தரவு - கதி கலங்கும் உலக நாடுகள்!
சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை - தாய்லாந்து அரசாங்கம் அறிவிப்பு!
|
|