சுவாதியின் நண்பர் பிலாலிடம் மீண்டும் விசாரணை!

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவன் கைது செய்யப்பட்டான்.
கைது செய்ய போலீசார் முயன்றபோது அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.இக்கொலை வழக்கு தொடர்பாக சுவாதியின் நண்பர் முகமது பிலாலிடம் போலீசார் பலமுறை விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், முகமது பிலாலிடம் போலீஸ் உயரதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த விசாரணையில், சுவாதி கொலை குறித்து பல்வேறு கேள்விகளை பிலாலிடம் போலீசார் கேட்டுள்ளனர்.
Related posts:
125 கோடி மக்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்..!!
ஆண் - பெண் சமநிலை எதிர்வரும் 100 ஆண்டுகளில்!
போர் நிறுத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளும் - அமெரிக்கா நம்ப...
|
|