சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து: 35 பயணிகள் உடல் கருகி பலி!

Sunday, June 26th, 2016

சீனாவில் உள்ள சாலை ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்த விபத்தில் 35 பயணிகள் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹுனன் மாகாணத்தில் உள்ள Yizhang என்ற நகரில் இருந்து இன்று காலை 56 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.

சில நிமிடங்களுக்கு பிறகு சாலையில் சென்ற அந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றுள்ளது. அப்போது, எதிரே இருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியதை தொடர்ந்து அந்த பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்து வெளியேற முடியாமல் 35 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். எஞ்சிய பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் எரிவாயு வெளியேறியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பேருந்து ஓட்டுனரை கைது செய்துள்ள பொலிசார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts: